\
மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை - 2 போலீசார் போக்சோவில் கைது

மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை - 2 போலீசார் போக்சோவில் கைது

மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை - 2 போலீசார் போக்சோவில் கைது
Published on

திருச்செந்தூர் அருகே மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த 2 போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூருக்கு அருகேயுள்ள ராணிமகாராஜபுரத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடிகள் தேரிக்குடியிருப்பு பகுதியில் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய காவலர் சசிக்குமார் மற்றும் இராணுவத்தை சேர்ந்த காவலர் பாலமுருகன் ஆகியோர் சென்றுள்ளனர். 

காதல்ஜோடிகளை பார்த்த அவர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டியதாக தெரிகிறது. மேலும் காதலனை அங்கிருந்து அடித்து விரட்டி விட்டு, 16 வயதான மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பணம் தரவில்லை என்றால் காதல் ஜோடி புகைப்படத்தை வெளியினில் விட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர். 

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் திருச்செந்தூர் மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சசிகுமார் மற்றும் அவரது நண்பர் பாலமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com