\
மின்சாரம் தாக்கியதில் இருவர் பலி : தருமபுரியில் சோகம்

மின்சாரம் தாக்கியதில் இருவர் பலி : தருமபுரியில் சோகம்

மின்சாரம் தாக்கியதில் இருவர் பலி : தருமபுரியில் சோகம்
Published on

தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. 

தருமபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி கிராமத்தில் பழனி என்பவர் அதிகாலை 4.30 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள மாட்டு தொழுவத்தில் இருந்து சாணத்தை எடுத்துக் கொண்டு, விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியில் புதிதாக வீடு கட்டிவரும் வடிவேல் என்பவர் வீட்டிற்கு மின்இணைப்பு கொடுத்துக்கொண்டிருந்த நிலையில், கீழே கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்தார்.

இதனால் பழனி மின்சாரம் தாக்கி துடிதுடித்தார். இதைக்கண்டு அவரை காப்பாற்றச் சென்ற தேவராஜன் என்பவரையும் மின்சாரம் தாக்கியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்து இருவரையும் மீட்டுள்ளனர். ஆனால், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நேற்று கன்னியாகுமரியில் மூன்று பேர் மின்சாரம் தாக்கி இறந்த நிலையில், இன்று தருமபுரியில் இருவர் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com