தமிழ்நாடு
கொடுத்த கடனை திரும்பக் கேட்டவர் கொலை : மதுரையில் இருவர் கைது..!
கொடுத்த கடனை திரும்பக் கேட்டவர் கொலை : மதுரையில் இருவர் கைது..!
மதுரையில் கடனை திரும்பக் கேட்ட நபரை திட்டமிட்டு கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகேயுள்ள முட்புதரில் நேற்று முன்தினம் உடலில் காயங்களுடன் தீயில் கருகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், இறந்தது மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பதும், அவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன முகவர் என்பதும் தெரியவந்தது.
அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த கணேஷ் பாபு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் இருவரும் சிவக்குமாரிடம் 5 லட்சம் பணத்தைக் கடனாகப் பெற்று பங்குச் சந்தை முதலீட்டில் ஈடுபட்டதாகவும், அதில் நஷ்டமடைந்ததாகவும் கூறப்படுகிறது.