\
வேலூரில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து: தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு

வேலூரில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து: தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு

வேலூரில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து: தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு
Published on

வேலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.

வேலூர் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வசூர் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் பெயின்ட் வேலை செய்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்? என்பது தெரியவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com