\
மதுரையில் கட்டடம் இடிந்து 2 பேர் பலி!

மதுரையில் கட்டடம் இடிந்து 2 பேர் பலி!

மதுரையில் கட்டடம் இடிந்து 2 பேர் பலி!
Published on: 

மதுரை மேலமாசி வீதியில் பழமையான வணிக கட்டட சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

மதுரை மேல மாசி வீதியில் வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான பழமையான குடியிருப்பு ஒன்று இருக்கிறது. இந்த கட்டடத்தை இடித்துவிட்டு குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள இன்று காலையிலிருந்து 10க்கும் மேற்பட்டோரை வைத்து வேலை நடந்து வந்திருக்கிறது.

இந்நிலையில் எதிர்ப்புறம் இருந்த கட்டடச் சுவர் இடிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய 6 பேரில் 3 பேரை உடனடியாக மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

இடிபாடுகளில் சிக்கிய 3 பேரில் சந்திரன் மற்றும் ராமன் ஆகிய இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டனர். உள்ளே சிக்கியுள்ள ஜெயராமன் என்பவரை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com