தேனி: கட்டி முடிக்கப்பட்ட ஒரே மாதத்தில் சேதமடைந்த தடுப்பணைகள் - பொதுமக்கள் அதிர்ச்சி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கட்டப்பட்ட ஒரே மாதத்தில் இரண்டு தடுப்பணைகள் சேதமடைந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே காமராஜர் புரத்தில் இருந்து பாலசுப்ரமணிய புரத்துக்குச் செல்லும் வழியில் உள்ள ஓடைகளில், 15 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டன. அதன் கட்டுமான பணிகள் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கன மழையில் இரண்டு தடுப்பணைகளும் சேதமடைந்தன. தரமற்ற பெருட்களைக் கொண்டு தடுப்பணை கட்டியதே இந்த நிலைக்கு காரணமென கிராமத்தினர் குற்றம் சாட்டினர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com