\
கொரோனா : சென்னையில் மேலும் இருவர் உயிரிழப்பு

கொரோனா : சென்னையில் மேலும் இருவர் உயிரிழப்பு

கொரோனா : சென்னையில் மேலும் இருவர் உயிரிழப்பு
Published on

கொரோனா தொற்று காரணமாக சென்னை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 64 வயது மூதாட்டி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 56 வயது மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 26 பேர் சென்னையில் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மதுரை, விழுப்புரம் மாவட்டங்களில் தலா 2 பேர், கோவை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், தேதி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். பிற மாநிலங்களை சேர்ந்த இருவரும் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com