மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீட்டிப்பு - முதலமைச்சர் பழனிசாமி

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீட்டிப்பு - முதலமைச்சர் பழனிசாமி

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீட்டிப்பு - முதலமைச்சர் பழனிசாமி
Published on

ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீட்டிப்பு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெறும் மருத்துவர்களின் பணியை நீட்டிப்பு செய்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியான அறிவிப்பின்படி, ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீட்டிப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com