நீலகிரி: காட்டுயானை தாக்கி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

நீலகிரி: காட்டுயானை தாக்கி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

நீலகிரி: காட்டுயானை தாக்கி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
Published on

நீலகிரியில் பந்தலூர் அருகே காட்டுயானை தாக்கி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள உப்பட்டி, பெருங்கரை கிராமத்தை சேர்ந்தவர்கள் சடையன் (58) மற்றும் எட்டிகண்ணு (59). இவர்கள் இருவரும் இன்று மாலை 4 மணி அளவில் விறகு எடுப்பதற்காக சாலையில் நடந்து வந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள புதரில் மறைந்திருந்த காட்டு யானை இருவரையும் தாக்கியிருக்கிறது. இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இந்நிலையில் ஊர் மக்கள் மருத்துவமனை முன்பாகக்கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்நேரம் பந்தலூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த திமுகவினர் மருத்துவமனைக்கு வந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அதிமுக வேட்பாளர் மற்றும் கட்சி நிர்வாகிகளும் மருத்துவமனை வளாகத்திற்கு வந்தனர்.

ஊர் மக்களை இருதரப்பினரும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். அதிகாரிகள் தரப்பில் திமுக மற்றும் அதிமுக கட்சியினரை அளித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com