\
கோவையில் வீடு இடிந்து விழுந்து விபத்து : இருவர் உயிரிழப்பு; தொடரும் மீட்புப்பணி

கோவையில் வீடு இடிந்து விழுந்து விபத்து : இருவர் உயிரிழப்பு; தொடரும் மீட்புப்பணி

கோவையில் வீடு இடிந்து விழுந்து விபத்து : இருவர் உயிரிழப்பு; தொடரும் மீட்புப்பணி
Published on

கோவையில் சரிந்து விழுந்த கட்டடத்தில், 8 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் இருவர் சடலமாகவும், 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

கோவை செட்டிவீதி பகுதியில் மழை காரணமாக வீடு இடிந்து விபத்துக்குள்ளானது. நேற்றிரவு 9.10 மணியளவில் வீடு சரிந்து விழுந்தது. இதனையடுத்து பொதுமக்களும், மீட்புத்துறையினரும் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

முதற்கட்டமாக இரவு 11 மணியளவில் வனஜாம்மாள்(70) கவிதா(48) ஆகிய இருவரும், இரவு 12 மணியளவில் 6 வயது சிறுவன் ஒருவனும் மீட்கப்பட்டனர். ஆனால் சிறுவனின் தாய் சாலினி(25) இரவு 2 மணியளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 74 வயதுடைய கோபால்சாமி என்பவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

மேலும் அதைத்தொடர்ந்து மனோஜ்(45) என்ற நபரும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

தொடர்ந்து மீட்புப் பணி விடிய விடிய நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் தீயணைப்பு துறையினர், மருத்துவக்குழு, மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறை என 300க்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com