\
காஞ்சிபுரம்: விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு
Published on

காஞ்சிபுரத்தில் முத்தியால்பேட்டை பகுதியில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை பகுதியில் கழிவு நீர் தேங்கி கசிந்து வந்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த லட்சுமனன் என்பவர் கழிவுநீர் காழ்வாயின் மூடியை திறந்து இறங்கி சுத்தம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவருக்கு விஷவாயு தாக்கி மயக்கமடைந்தார்.

(சுணில்)

இதைப்பார்த்த சுணில் என்ற 22 வயது இளைஞர் அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் துர்திஷ்டவசமாக மயக்கமடைந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அரைமணிநேரம் போராடி சுணிலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி லட்சுமணன் உடலை மீட்டனர். எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் லட்சுமணன் கழிவுநீர் கால்வாயில் இறங்கியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், காவல்துறை, வருவாய்த்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com