இறந்த பின்னும் உயிர் வாழும் சமூக ஆர்வலர்! மூளைச்சாவடைந்தவரின் 2 சிறுநீரகங்கள், கல்லீரல் தானம்!

மூளைச்சாவால் உயிரிழந்த சமூக ஆர்வலரான சோமசேகரன் என்பவரது உடல் உறுப்புகள் ஏழை மக்களுக்கு உறுப்பு தானம் வழங்கப்பட்டது.

கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்ட சோமசேகரன் (வயது 65) என்பவர் சென்னை வெங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உடல் பலவீனம் மற்றும் உணர்திறன் பாதிப்புக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாரிய பக்கவாதம் நோய் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். மருத்துவமனையில் அவருக்கு தொடர்ச்சியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் அவரது நிலை மோசம் அடைந்தது.

இந்நிலையில் தீவிர உடல்நலக்குறைவால் சோமசேகரன் மூளை சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரின் உடல் உறுப்புகளை ஏழை மக்களுக்கு உறுப்பு தானம் செய்ய விரும்புவதாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் குடும்பத்தாரின் விருப்பத்தின் பேரில் சோமசேகரனது கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தேவைப்பட்ட நோயாளிகளுக்கு மாற்றப்பட்டது.

உடல் உறுப்பு தானம்
உடல் உறுப்பு தானம்PT

சமூக ஆர்வலராக இருந்து வந்த சோமசேகரன் தன்னை சுற்றியுள்ள மக்களுக்கு சேவை செய்து வந்த நிலையில், சேவை மனப்பான்மை கொண்ட அவருடைய உயிர் மண்ணை விட்டுப் போனாலும் அவரது உடல் உறுப்புகள் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் என அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com