பள்ளி வேன் மோதி மாணவன் உயிரிழந்த சம்பவம் - 2 பேருக்கு நீதிமன்ற காவல்

பள்ளி வேன் மோதி மாணவன் உயிரிழந்த சம்பவம் - 2 பேருக்கு நீதிமன்ற காவல்
பள்ளி வேன் மோதி மாணவன் உயிரிழந்த சம்பவம் - 2 பேருக்கு நீதிமன்ற காவல்

சென்னையில் பள்ளி வேன் மோதி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஓட்டுநர் பூங்காவனம் மற்றும் பெண் ஊழியர் ஞானசக்தியை காவல்துறை கைது செய்திருந்தது. இதில் ஓட்டுநர் பூங்காவனம் சர்க்கரை நோயால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து ஞானசக்தியை சிறையில் அடைத்துள்ளனர். பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், பள்ளி முதல்வர் தனலட்சுமி ஆகியோரிடம் வளசரவாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com