\
பெசண்ட் நகர் கடலில் 2 ஐடிஐ மாணவர்கள் மூழ்கினர்

பெசண்ட் நகர் கடலில் 2 ஐடிஐ மாணவர்கள் மூழ்கினர்

பெசண்ட் நகர் கடலில் 2 ஐடிஐ மாணவர்கள் மூழ்கினர்
Published on

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, கவர்னர் கெஸ்ட் அவுஸ் பின்புறம் ஐடிஐ மாணவர்கள் இரண்டு பேர் கடலில் மூழ்கி காணமால் போனதாக போலீசார் தேடி வருகின்றனர். 

கோடம்பாக்கம் ஐடிஐ யில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் சர்வேஸ்வரன்(18), ஆகாஷ்(18). இவர்கள் நண்பர்களுடன் இன்று காலை சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள கடலில் குளிக்கச் சென்றனர். அப்போது இருவரும் கடலில் மூழ்கி காணாமல் போயினர். 

இவர்களுடன் குளிக்கச் சென்ற லோகேஷ்(17) என்ற மாணவர் கடலில் மூழ்கியுள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அடையார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். காணாமல் போன மாணவர்களை சாஸ்திரி நகர் போலீசார் மீனவர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com