\
திருவண்ணாமலை: தொகுப்பு வீடுகள் இடிந்து விழுந்து இருவர் காயம்

திருவண்ணாமலை: தொகுப்பு வீடுகள் இடிந்து விழுந்து இருவர் காயம்

திருவண்ணாமலை: தொகுப்பு வீடுகள் இடிந்து விழுந்து இருவர் காயம்
Published on

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தொகுப்பு வீட்டின் முன்பக்க சிலாப் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

தெள்ளாரில் 1992-ஆம் ஆண்டில் 22 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தொகுப்பு வீடுகளின் மேற்கூரை சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் தெரியும் அளவில் சேதமடைந்துள்ளன. பல வீடுகளில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் மக்கள் வேறு வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜி என்பவரின் வீட்டின் முன்பக்க சிலாப் திடீரென இடிந்துவிழுந்ததில், அவரது மனைவி மற்றும் சிறுவன் ஆகிய இருவரும் காயமடைந்தனர். மேலும் பல வீடுகள் இதுபோல் இடியும் நிலையில் உள்ளதால், தொகுப்பு வீடுகளை உடனே சீரமைத்து தரவேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com