\
தமிழக அரசின் ஆலோசகரை தொடர்ந்து மேலும் 2 உயரதிகாரிகள் பதவி விலகல்?

தமிழக அரசின் ஆலோசகரை தொடர்ந்து மேலும் 2 உயரதிகாரிகள் பதவி விலகல்?

தமிழக அரசின் ஆலோசகரை தொடர்ந்து மேலும் 2 உயரதிகாரிகள் பதவி விலகல்?
Published on

ஷீலா பாலகிருஷ்ணனைத் தொடர்ந்து தமிழக அரசின் இரண்டு முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளும் பதவி விலகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதன்மைச் செயலாளர் கே.என். வெங்கட்ரமணன் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் ஏ.ராமலிங்கம் ஆகியோரும் தங்கள் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1987ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிப் பிரிவைச் சேர்ந்தவரான‌ கே.என். வெங்கட்ரமணன், கடந்த 2012 ஆம் ஆண்டே ஓய்வு பெற்ற நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக பதவி நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தார். அவரது பதவிக் காலம் மே மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அவர் விலகியிருப்பதாக கூறப்படுகிறது. முதலமைச்சரின் செயலாளரான ஏ. ராமலிங்கம், 1996 தமிழக பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com