பார்த்தசாரதி கோயில் நிலத்தை மோசடி செய்து விற்ற இருவர் கைது..!

பார்த்தசாரதி கோயில் நிலத்தை மோசடி செய்து விற்ற இருவர் கைது..!

பார்த்தசாரதி கோயில் நிலத்தை மோசடி செய்து விற்ற இருவர் கைது..!
Published on

சென்னை பார்த்தசாரதி கோயில் நிலத்தை மோசடி செய்து விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் வைதேகி. வயது 32. இவர் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், தன்னுடைய நடன பள்ளியின் விரிவாக்க பணிகளுக்கு திருவல்லிக்கேணி பகுதியில் நிலம் வாங்க முயற்சி செய்ததாக குறிப்பிட்டிருந்தார். அப்போது நிலத்தரகரான பாலாஜி என்பவர் மூலம் ராஜேந்திரன் தனக்கு அறிமுகம் ஆனதாகவும், அவர் தனது நிலம் எனக் கூறி முத்துக்காலதி தெருவில் உள்ள 1,041 சதுர நிலத்தை தனக்கு விற்றதாகவும் கூறினார். தான் கட்டட பணிகளை மேற்கொண்டபோது, அது கோயில் நிலம் என தெரியவந்ததாகவும் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியபோது சம்பந்தப்பட்ட இரண்டு பேரும் தலைமறைவாகினர். இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று ராஜேந்திரன் மற்றும் பாலாஜி ஆகிய இருவரை கைது செய்தனர். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com