திண்டுக்கல்: அரசு அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்த இருவருக்கு நேர்ந்த பரிதாபம்

நத்தம் அருகே அனுமதியின்றி நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த இருவர் வெடி விபத்தில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
police investigation
police investigationpt desk

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேத்தூர் ஊராட்சி மங்கம்மா சாலை அருகே தனியாருக்குச் சொந்தமான மாந்தோப்பில் ராஜா (28) கருப்பையா (25) ஆகிய இருவரும் அரசு அனுமதியின்றி பேப்பர் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெடி வெடித்து சிதறியுள்ளது. இதில், இருவரும் சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

dead body
dead bodypt desk

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அரசு அனுமதியின்றி வெடி தயாரித்தது தொடர்பாக காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

police investigation
அரியலூர்: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.36 லட்சம் மோசடி – தலைமறைவாக இருந்த கணவன் மனைவி கைது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com