தமிழ்நாடு
நெய்வேலி என்எல்சியில் விபத்து : 5 ஊழியர்கள் உயிரிழப்பு; 17 பேர் காயம்
நெய்வேலி என்எல்சியில் விபத்து : 5 ஊழியர்கள் உயிரிழப்பு; 17 பேர் காயம்
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் பாய்லரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
17 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் தேடும்பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து தொழிலாளர்களின் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். என்எல்சி அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு இல்லாததால் தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.