Road accidentpt desk
தமிழ்நாடு
தி.மலை: பௌர்ணமி கிரிவலம் முடித்துவிட்டு ஊர் திரும்பிய இரண்டு இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிய இரண்டு இளைஞர்கள் மீது கார் மோதிய விபத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிந்தனர்.
செய்தியாளர்: கோவிந்தராஜூலு
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருவண்ணாமலை புறவழிச் சாலையில் கீழ் அணைக்கரை கிராமத்தின் அருகே சென்ற போது, கர்நாடக பதிவெண் கொண்ட கார் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Road accidentpt desk
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க வந்த திருவண்ணாமலை மேற்கு காவல் துறையினர் இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவு இந்த சம்பவம் நடைபெற்றதால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.