கள்ளக்குறிச்சி : குட்டையில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி : குட்டையில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி : குட்டையில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் குட்டையில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் கிராமம் புது காலனியை சேர்ந்தவர்கள் சக்திவேல்- வேடிப்பிள்ளை. இவர்களின் 2 வயது மகன் தில்சனும் அதேபகுதியைச் சேர்ந்த மஞ்சுநாதன்- விஜயலட்சுமி தம்பதியின் 6 வயது மகன் ரித்தினும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அருகில் உள்ள குட்டையில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் சிறுவர்களின் உடல்களை மீட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 2 சிறுவர்கள் உயிரிழந்ததையடுத்து கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com