தமிழ்நாடு
தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 காளை மாடுகள் ரயில் மோதி உயிரிழப்பு
தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 காளை மாடுகள் ரயில் மோதி உயிரிழப்பு
ஆவடி அருகே மின்சார ரயிலில் அடிபட்டு இரண்டு காளை மாடுகள் உயிரிழந்தன. இதனால் 1 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று மாலை திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஆவடி - அண்ணனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு காளை மாடுகள் மீது ரயிலில் மோதியதில் இரு மாடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இதனால், சென்னை செல்லும் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்த ஆவடி ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரயிலில் சிக்கியிருந்த இரண்டு மாடுகளையும் சடலமாக மீட்டனர். இதையடுத்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயில்கள் புறப்பட்டுச் சென்றது.