கல்க்குட்டையில் குளிக்கச்சென்ற சிறுவர்கள் - நீச்சல் தெரியாததால் நேர்ந்த பரிதாபம்

கல்க்குட்டையில் குளிக்கச்சென்ற சிறுவர்கள் - நீச்சல் தெரியாததால் நேர்ந்த பரிதாபம்
கல்க்குட்டையில் குளிக்கச்சென்ற சிறுவர்கள் - நீச்சல் தெரியாததால் நேர்ந்த பரிதாபம்

மடிப்பாக்கத்தில் கல்க்குட்டையில் குளிக்கச்சென்ற இரண்டு சிறுவர்கள் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.

சென்னை மடிப்பாக்கம் அடுத்த கீழ்க்கட்டளை அன்பு நகர் கல்க்குட்டையில் 4 சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அதில் 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுவர்களான மோனீஷ்(13) மற்றும் பர்வேஷ்(12) ஆகியோர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினர். இருவரும் நீரில் மூழ்கியதை பார்த்த, உடன் சென்ற சிறுவர்கள் இருவர் அருகில் உள்ளவர்களுக்கு தெரியபடுத்தியதின் பேரில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் மேடவாக்கம் மற்றும் கிண்டியிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் நீண்ட நேரம் தேடி, இருவரது உடல்களையும் சடலமாக மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com