\
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆட்டோ டிரைவர்கள் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆட்டோ டிரைவர்கள் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆட்டோ டிரைவர்கள் கைது
Published on: 

மதுரையில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த இரண்டு ஆட்டோ டிரைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர் 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கா தனக்கன்குளம் பகுதியில் வசித்து வரும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தினமும் ஆட்டோ மூலமாக பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

 நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது ஆட்டோ டிரைவர் விஜயகுமார் மற்றும் அவரது நண்பர் பிரதாப் ஆகியோர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.  

மாணவி கூச்சலிட்டதால் அவரை வீட்டில் இறக்கி விட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரும் தப்பி சென்றுள்ளனர். நடந்த விவரத்தை தன் பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார். உடனடியாக மாணவியின் தந்தை , திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றஞ்சாட்டப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் விஜயகுமார் மற்றும் அவரது நண்பர் பிரதாப் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com