சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது
சென்னையில் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திரபிரதேசம் ரேணிகுண்டாவைச் சேர்ந்தவர் 21 வயதான மோகன். இவர் சில வாரங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் தொலைபேசியில் பழகியுள்ளார். இவர்களின் பழக்கம் நாளடைவில் நெருக்கமாகவே நேரில் சந்திக்க தயாராகியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர அவளை கண்டித்துள்ளனர்.
இதையடுத்து சிறுமியை சந்திக்க மோகன் தனது நண்பர் விஜய் என்பவருடன் ராயபுரம் வந்துள்ளார். அப்போது சிறுமியிடம் நான் உன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி திருவள்ளூரில் உள்ள விஜயின் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து விட்டு மீண்டும் சென்னை வந்து விட்டுச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ந்துபோன பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனையும் விஜயையும் தேடிக்கண்டறிந்து கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் சப் இன்ஸ்பெக்டரின் மகன் ஒருவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.