Anacondapt desk
தமிழ்நாடு
வண்டலூர் பூங்காவின் புதிய வரவு: 20 குட்டிகளை ஈன்றுள்ள 2 அனகோண்டாக்கள்!
வண்டலூர் பூங்காவில் மஞ்சள் அனகோண்டா 9 குட்டிகளையும், மற்றொரு அனகோண்டா 11 குட்டிகளையும் ஈன்றுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்: சாந்தகுமார்
வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “வன உயிரின பாதுகாப்புக்கான முன்னணி மையமாக விளங்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இம்மாதத்தில் பிறந்த உயிரினங்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், ஜூலை 10, 2024 அன்று, உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா ஒன்பது குட்டிகளை ஈன்றது.
Informationpt desk
அதன் மறுநாள், ஜூலை 11, 2024 அன்று, மற்றொரு அனகோண்டா பதினொரு குட்டிகளை ஈன்றுள்ளது. அதேபோல் இந்தியாவில் மட்டுமே காணப்படும் காட்டுப்பூனை ஜூலை 13, 2024 அன்று மூன்று புதிய குட்டிகளை ஈன்றுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.