\
உரிமையாளரை ஏமாற்றி நிதி நிறுவனத்தில் கொள்ளை! போலீசார் வலைவீச்சு

உரிமையாளரை ஏமாற்றி நிதி நிறுவனத்தில் கொள்ளை! போலீசார் வலைவீச்சு

உரிமையாளரை ஏமாற்றி நிதி நிறுவனத்தில் கொள்ளை! போலீசார் வலைவீச்சு
Published on: 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே நிதி நிறுவனத்தில் புகுந்த கொள்ளையர்கள், பணத்தை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்தவர் நல்லசாமி. இவர் மொடக்குறிச்சியில் இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

வழக்கம்போல் நல்லசாமி கடையில் இருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் உங்கள் உறவினர்கள் இரண்டு பேர் விபத்தில் சிக்கியுள்ளதாகவும் உடனடியாக அழைத்து வரச் சொன்னதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய நல்லசாமி லாக்கரை பூட்டிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். 

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவர்கள் இரண்டு பேரும் லாக்கரை உடைத்து அதில் இருந்த 82 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். அதேபோல் எழுமாத்தூரிலும் கொள்ளையர்கள் பூட்டை உடைத்து 16 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளனர். 

இதைத்தொடர்ந்து நல்லசாமியின் நிதிநிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com