தமிழ்நாடு
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி - பெண் உட்பட 2 பேர் கைது
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி - பெண் உட்பட 2 பேர் கைது
சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி செய்ய முயன்றதாக, இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயனாவரத்தைச் சேர்ந்த சர்மிளா என்பவர், தனது மகள்களுடன் ஆண்டர்சன் தெரு வழியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த ஒருவர், சர்மிளாவின் கைப்பையை பறித்துச் சென்றுள்ளார். கூச்சல் சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள், ஆட்டோவை சுற்றிவளைத்தனர்.
ஆட்டோ ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், அதில் இருந்த பெண்ணைப் பிடித்த பொதுமக்கள் அவரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா என்ற அந்த பெண், வழப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. ஆட்டோ ஓட்டுநர் பிரபு மற்றும் அர்ச்சனாவை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.