சிறார், பெண்கள் குறித்த ஆபாச சிடிக்கள் விற்பனை: 2 பேர் கைது
கமுதியில் பெண்கள், சிறார் ஆபாச சிடிக்களை விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெண்கள் மற்றும் சிறார் குறித்த ஆபாச சிடிக்கள் விற்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிடி விற்பனை கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மரக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொன் இருள் மற்றும் வழி விட்டான் ஆகியோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தமான ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அதனை கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் செல்போன், பென்டிரைவ் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்து கொடுத்ததும், சிடிக்களை விற்பனை செய்தும் வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.