\
அம்பேத்கர் சிலை சேதம் - 2 பேர் கைது 

அம்பேத்கர் சிலை சேதம் - 2 பேர் கைது 

அம்பேத்கர் சிலை சேதம் - 2 பேர் கைது 
Published on

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக அரசு சார்பில் புதிய சிலை வைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இ‌டங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில், அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதாக பாண்டியராஜன், லெனின் ஆகிய 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com