சென்னையில் 2 லட்சத்து எட்டாயிரம் பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து..!

சென்னையில் 2 லட்சத்து எட்டாயிரம் பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து..!

சென்னையில் 2 லட்சத்து எட்டாயிரம் பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து..!
Published on

சென்னையில் 2018-ஆம் ஆண்டு முதல் இந்தாண்டு மே மாதம் வரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 904 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 2018-ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 475 பேரின் ஓட்டுநர் உரிமங்களையும், இந்தாண்டு மே மாதம் வரை 55 ஆயிரத்து 429 பேரின் ஓட்டுநர் உரிமங்களையும், தற்காலிகமாக ரத்தும் செய்யும்படி போக்குவரத்து துறைக்கு காவல்துறையினர் பரிந்துரை செய்தனர். தங்கள் பரிந்துரையை ஏற்று ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிப்பதாக போக்குரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் விதிகளை மீறியதற்காக 2018 ஆம் ஆண்டு 24 லட்சத்து 47 ஆயிரத்து 329 வழக்குகள் பதியப்பட்டு, அதன் மூலம் அபராதமாக 27 கோடியே 20 லட்சத்து 88 ஆயிரத்து 430 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 7 லட்சத்து 88 ஆயிரத்து 563 வழக்குகள் பதியப்பட்டு, அதன் மூலம் 8 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரத்து 350 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com