தெலுங்கானா முதல்வரின் மகள் களமிறங்கிய தொகுதியில் வாக்குச்சீட்டு முறை

தெலுங்கானா முதல்வரின் மகள் களமிறங்கிய தொகுதியில் வாக்குச்சீட்டு முறை
தெலுங்கானா முதல்வரின் மகள் களமிறங்கிய தொகுதியில் வாக்குச்சீட்டு முறை

தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா களமிறங்கியுள்ள நிசாமாபாத் தொகுதியில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தெலங்கானாவில் முதல் கட்டமாக ஏப்ரல் 11ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தெலங்கானாவில் மஞ்சள் பயிருக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்காததால் அதிருப்தியடைந்த விவசாயிகள் ஆயிரம் பேர், அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா போட்டியிடும் நிசாமாபாத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இதில் 178 விவசாயிகள் உட்பட 185 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 

அதனால், நிசாமாபாத் தொகுதியில் மட்டும் வாக்குச் சீட்டு முறையில் வாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மின்னணு வாக்கு இயந்திரத்தில் 63 வேட்பாளர்கள் மற்றும் கூடுதலாக நோட்டோ மட்டுமே இடம் பெற முடியும் என்பதால் வாக்குச் சீட்டுக்கு ஏற்பாடு செய்யவுள்ளதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரஜத்குமார் தெரிவித்துள்ளார். 

இதற்குமுன், கடந்த 1996ஆம் ஆண்டு நல்கொண்டாவில் 480 வேட்பாளர்களும், பெல்காமில் 456 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இதைத்தொடர்ந்து 2010ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள வாரங்கல் இடைத்தேர்தலில் 64 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில், நிசாமாபாத்தில் தொகுதியில் 185 வேட்பாளர்கள் என்பதால் வாக்குச்சீட்டு புத்தக வடிவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com