
ஒகி புயலில் சிக்கி லட்சத்தீவு பகுதியில் கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 180 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயின. வரலாறு காணாத வகையில் அந்தப் பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டது. கேரளத்தின் சில பகுதிகளிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் மகாராஷ்டிரா, குஜராத் பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் லட்சத்தீவு கடல் பகுதியில் 17 படகுகளில் தத்தளித்துக் கொண்டிருந்த 180 தமிழக மீனவர்களை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். 180 பேரும் எந்தெந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஒகி புயலால் கடலில் காணாமல்போன மேலும் பல மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.