\
அதிகாரிகள் அலட்சியம் மழையில் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்

அதிகாரிகள் அலட்சியம் மழையில் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்

அதிகாரிகள் அலட்சியம் மழையில் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்
Published on: 

கனமழையால் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்த 18 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகின.அதிகாரிகளின் அலட்‌சியம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் பெய்த கனமழையால் நுகர்பொருள் வாணிப கழகத்தில் வைக்கப்பட்டிருந்த 18 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்‌து சேதமடைந்தன. குருகுலம் கிராமத்தில் ‌உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், அரசு கொள்முதல் செய்திருந்த 18 ஆயிரம் நெல் மூ‌ட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பெய்த கனமழையால் நெல் மூட்டைகள் அனைத்தும் மழைநீரில் நனைந்து நாசமாகின. மூட்டைகளை தார்பாய் போட்டு பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததே இந்நிலைக்கு காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com