18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் - நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பு ! Live Update
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட தங்கத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது.
இதையடுத்து வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து வந்தார். விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று 3வது நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு அளித்துள்ளார்.