\
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சரியே - முதலமைச்சர் தரப்பு‌

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சரியே - முதலமைச்சர் தரப்பு‌

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சரியே - முதலமைச்சர் தரப்பு‌
Published on

முதலமைச்சருக்கு பேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா என்று ஆளுநர் முடிவெடுக்கும் நிலையை ஏற்படுத்தியதால், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சரியே என்று முதலமைச்சர் தரப்பு‌ வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனையடுத்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணனின் விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் பழனிசாமி சார்பில், மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி வாதிட்டார். அப்போது, முதலமைச்சருக்கு பேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா என்று ஆளுநர் முடிவெடுக்கும் நிலையை ஏற்படுத்தியதால், கட்சியின் உறுப்பினர் பதவியை தானாக விட்டுக் கொடுத்ததாக கருத முடியும் எனக் குறிப்பிட்டார். 

ஆகையால் தான் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 18 எம்எல்ஏக்களின் செயல்பாட்டைப் பொருத்திப் பார்த்தால் அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது சரியே என்றும் வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதிட்டார். முதலமைச்சர் தரப்பு வாதம் நிறைவடைந்ததையடுத்து, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி இன்று ஆஜராகி வாதிடவுள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com