18 + தடுப்பூசி போடும் திட்டம்: திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்
தமிழகத்தில் நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை திருப்பூரில் நாளை தொடங்கி வைக்கிறார், முதல்வர் மு.க ஸ்டாலின்.
கடந்த வாரத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்திடமிருந்து 7 புள்ளி 96 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளையும், பாரத் பயோடெக் நிறுவனங்களிடமிருந்து 1 புள்ளி 66 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளையும் தமிழக அரசு நேரடியாக வாங்கி சேமித்து வைத்துள்ளது. இந்நிலையில் மேலும் 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வந்துள்ளன.
மொத்தம் 10 புள்ளி 62 லட்சம் டோஸ்கள் கையிருப்பு உள்ளதால், 18 முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கடந்த ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், தடுப்பூசி பற்றாக்குறையால் தமிழகத்தில் அந்த திட்டம் தாமதமாக நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. மேலும் 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன.