இன்றுடன் நிறைவு பெறுகிறது திருத்துறைப்பூண்டி நெல் திருவிழா

இன்றுடன் நிறைவு பெறுகிறது திருத்துறைப்பூண்டி நெல் திருவிழா
இன்றுடன் நிறைவு பெறுகிறது திருத்துறைப்பூண்டி நெல் திருவிழா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 13ஆவது தேசிய நெல் திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவுபெறும் இந்த நெல் திருவிழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.

மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமனின் முயற்சியே திருத்துறைப்பூண்டியில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய நெல் திருவிழா. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வகையில் நடைபெற்ற அமைதிப் பேரணியுடன் இந்தாண்டு நெல் திருவிழா உற்சாகமாக நேற்று தொடங்கியது. கண்காட்சி அரங்கத்தையும் நெல் ஜெயராமன் படத்தையும் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.

2007ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த திருவிழாதான் பல விவசாயிகள் பாரம்பரிய நெல்லை பயிரிடக் காரணம். திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிக்கு 2 கிலோ பாரம்பரிய நெல் இலவசமாக வழங்கப்படும். அதனை இயற்கை வேளாண் முறையில் பயிரிட்டு அடுத்த ஆண்டு 4 கிலோவாக திருப்பித்தர வேண்டும். அவ்வாறு தரப்பட்ட நெல் மீண்டும் இரண்டு விவசாயிக்கு வழங்கப்படும். 

தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில விவசாயிகளையும் பாரம்பரிய நெல்லை நோக்கித் திருப்பிய பெருமை இந்தத் திருவிழாவிற்கு உண்டு. இந்தாண்டு திருவிழாவில் ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். நேற்று தொடங்கிய நெல் திருவிழா இன்றுடன் நிறைவுபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com