டாக்டர் வீட்டில் 170 சவரன் நகை, ரொக்கம் கொள்ளை : சென்னையில் துணிகரம்

டாக்டர் வீட்டில் 170 சவரன் நகை, ரொக்கம் கொள்ளை : சென்னையில் துணிகரம்

டாக்டர் வீட்டில் 170 சவரன் நகை, ரொக்கம் கொள்ளை : சென்னையில் துணிகரம்
Published on

சென்னையில் உள்ள மருத்துவர் வீட்டில் 170 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

சென்னை திருவேற்காடு, கோ ஆப்பரேட் சொசைட்டியில் வசித்து வருபவர் சந்தானமுத்து. இவரது மகன் சித்தார்த்தன் பிரபல தனியார் மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். இவரது தந்தை சந்தானமுத்துக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை அண்ணா நகரில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். இதனால் வீட்டில் இருந்த சித்தார்த்தின் தாய் ஜெயலட்சுமி மற்றும் தாத்தா, பாட்டி ஆகிய அனைவரும் மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர். 

பின்னர், காலை வீட்டிற்கு வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 170 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர், திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு திருவேற்காடு பகுதியில், அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 31 சவரன் நகை கொள்ளை கொள்ளை அடிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நாட்களிலேயே மீண்டும் திருவேற்காட்டில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com