\
17 சவரன் நகை; 3 செல்போன் - வீட்டை திறந்து வைத்துவிட்டு தூங்கியபோது கைவரிசை

17 சவரன் நகை; 3 செல்போன் - வீட்டை திறந்து வைத்துவிட்டு தூங்கியபோது கைவரிசை

17 சவரன் நகை; 3 செல்போன் - வீட்டை திறந்து வைத்துவிட்டு தூங்கியபோது கைவரிசை
Published on

பெரம்பலூரில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் 17 சவரன் நகை மற்றும் 3 செல்போனை திருடிச்சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் ரெங்கம்மாள் நகரில் வசிப்பவர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வாசுதேவன். இவர் நேற்றிரவு வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு குடும்பத்துடன் தூங்கியுள்ளார். இதனை வாய்ப்பாக பயன்படுத்திய மர்ம நபர்கள் நள்ளிரவில் வீடுபுகுந்து தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.

காலையில் எழுந்த வாசுதேவன், வீட்டில் திருடுபோயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தில் 17 சவரன் நகை மற்றும் 3 செல்போன் திருடுபோனதாக கூறப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com