\
நிவர் புயல் எதிரொலி: மின் கம்பத்தில் மோதி 16 வயது சிறுவன் உயிரிழப்பு

நிவர் புயல் எதிரொலி: மின் கம்பத்தில் மோதி 16 வயது சிறுவன் உயிரிழப்பு

நிவர் புயல் எதிரொலி: மின் கம்பத்தில் மோதி 16 வயது சிறுவன் உயிரிழப்பு
Published on

வேதாரண்யம் அருகே பலத்த காற்றில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் சென்ற 16 வயது சிறுவன் மின்கம்பத்தி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வானவன்மகாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் புண்ணியகுமார் (16). இவர் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக வெள்ளப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் பெற்றோர்களுடன் தங்கி இருந்தார்.

இந்நிலையில், மாலையில் பெற்றோருக்கு தேவையான உடை எடுத்து வருவதற்காக விஸ்வா என்பவருடன் வானவன்மகாதேவியில் தனது வீட்டிற்கு இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பலத்த காற்று வீசியுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி புண்ணியக்குமார் மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடன் சென்ற விஷ்வா பலத்த காயத்துடன் நாகை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வேட்டைக்காரனிருப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com