
லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ளது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இந்தக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி கல்லூரி கௌரவ விரிவுரையாளர் வினோத் குமாரை சரமாரியாக தாக்கிய 16 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் மாரியம்மாள் உத்தரவிட்டுள்ளார்.
விரிவுரையாளர் வினோத் குமாரை தாக்கிய போது கல்லூரியில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தியதால் மாணவர்கள் 16 பேரை கல்லூரி முதல்வர் மாரியம்மாள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.