அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள்.. அதிரடி காட்டிய ராமதாஸ் பொதுக்குழு!
புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்தில் ராமதாசின் மகள் காந்திமதி கலந்து கொண்டுள்ளார். அத்துடன் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என 4,000 பேர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன..
1. மைக்கை தூக்கிப் போட்டு ராமதாஸ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், பனையூர் அலுவலகத்துக்கு வரச்சொல்லி தொண்டர்களுக்கு கைப்பேசி எண் கொடுத்தது.
2. தைலாபுரத்தில் நடந்த மா.செ. கூட்டத்தில், 100 மா.செ.க்களை வராமல் தடுத்தது.
3. சமூக ஊடகங்களில் ராமதாஸ் பற்றி அவதூறான, அருவருக்கத்தக்க, இழிவுபடுத்தும் செய்திகளை வெளியிட்டது.
4. சமரச பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளாமல் உதாசீனப்படுத்தியது.
5. ராமதாஸ் இருக்கைக்கு கீழ் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது.
6. அனுமதி பெறாமல் பொதுக்குழு நடத்தி, அதில் ராமதாஸுக்கு தனி இருக்கையில் துண்டும் படமும் வைத்து, ‘ராமதாஸுக்கு நல்ல புத்தி கிடைக்க வேண்டும்’ என வேண்டியது.
7. அனுமதியை மீறி ‘உரிமை மீட்க, தலைமை காக்க’ என்ற நடைபயணம் கபட நாடகம் நடத்தியது.
8. ராமதாஸை சந்திக்க வருவோரிடம், பணமும் பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறி பனையூருக்கு கடத்திச் செல்வது.
9. என் படம் போடக்கூடாது, பெயரை பயன்படுத்தக்கூடாது என ராமதாஸ் வலியுறுத்தப் பின்னரும், கூட்டங்களிலும் கட்சிக்காரர்களிடமும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி பேசிவருவது.
10. மக்கள் தொலைக்காட்சியை அபகரித்தது.
11. பசுமைத்தாயகம் அமைப்பை திட்டமிட்டு கைப்பற்றிக் கொண்டது.
12. ராமதாஸ் அனுமதி பெறாமல் பொதுக்குழு கூட்டியதுடன், அதில் அவருக்கு இருக்கை வைத்து துண்டு அணிவித்தது.
13. பாமக தலைமை அலுவலகத்தை, ராமதாஸுக்கு தெரியாமலேயே மாற்றியது.
14. ராமதாஸ் நீக்கியவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்ததும், அவர் சேர்த்தவர்களை நீக்கியது செல்லாது.
15. ராமதாஸிடம் எதுவுமே பேசாமல், 40 முறை பேசியதாக பொதுவெளியில் சொன்னது.
16. ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் இருந்தபோது, கூட்டுப் பிரார்த்தனை செய்வதாக கேலி கிண்டல் செய்தது.
ஆகியவற்றை ஒருமனதாக ஏற்க ஒழுங்கு நடவடிக்கைக் குழு கோரிக்கை விடுத்துள்ளனர்..