காலை 10 மணிக்குள் சென்னை வர வேண்டும் - புதிதாக பணியமர்த்தப்பட்ட மருத்துவர்களுக்கு உத்தரவு

காலை 10 மணிக்குள் சென்னை வர வேண்டும் - புதிதாக பணியமர்த்தப்பட்ட மருத்துவர்களுக்கு உத்தரவு
காலை 10 மணிக்குள் சென்னை வர வேண்டும் - புதிதாக பணியமர்த்தப்பட்ட மருத்துவர்களுக்கு உத்தரவு

(கோப்பு புகைப்படம்)

இன்று காலை 10 மணிக்குள் சென்னை வர வேண்டுமென புதிதாக பணியமர்த்தப்பட்ட மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் 1550 பேர் சென்னையில் பணியமர்த்தப்பட உள்ளதாக ஜூன் 5-ஆம் தேதி சுகாதாரத்துறை தெரிவித்திருந்த நிலையில் தற்போது உடனடியாக இன்று காலை 10 மணிக்குள் சென்னை வர வேண்டுமென அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 980 பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் 2மாதங்களுக்கு சென்னையில் தங்கி சிகிச்சையளிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும், அரசு தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளிலும் சிகிச்சையளிக்க இவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com