2020 முதல் தற்போது வரை தமிழகத்தில் 1,510 பாலியல் குற்றங்கள்!

2020-ம் ஆண்டு முதல் 2023 வரை தமிழகத்தில் 1,510 பாலியல் வன்புணர்வு குற்றங்கள் நடைபெற்று உள்ளதாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புபிரிவு காவல்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.
பாலியல் குற்றங்கள்
பாலியல் குற்றங்கள்புதிய தலைமுறை

பாலியல் குற்றங்கள்!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் தகவல்படி, " 2020 ஆண்டு முதல் 2023 ஆண்டு வரை தற்போதுவரை சுமார் 1500 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாலியல் கொலை செய்தல் வழக்குகள் 25 பதிவாகியுள்ளன.

பாலியல் குற்றங்கள்
சென்னையில் ஒரே நாளில் 23 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

ஆசிட் வீச்சு தொடர்பாக 24 மற்றும் பெண் கடத்தல் தொடர்பாக சுமார் 960 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,300க்கும் மேற்பட்ட ஒழுக்கக்கேடான கடத்தல் வழக்குகளும், நகை கேட்டு கொலை செய்த நூறுக்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வரதட்சணை தடை சட்டத்தில் சுமார் 900 வழக்குகளும், கணவனின் உறவினர்களால் கொடுமை என சுமார் 3000 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாலியல் துன்புறுத்தல் என சுமார் 4,000 மற்றும் பெண்களால் துன்புறுத்தல் என 155 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிணைக்கப்பட்ட தொழிலாளர் சட்டத்தின்கீழ் சுமார் 27,500 வழக்குகளும், பெண்களை காணவில்லை என சுமார் 41,800 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களில் ஆண்டுவாரியாக:

2020 ஆண்டு சுமார் 17,300

2021 ஆண்டு சுமார் 21,000

2022 ஆண்டு சுமார் 23600

இந்த ஆண்டில் தற்போது வரை சுமார் 20,000

வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் (ஆண்டுவாரியாக)
பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் (ஆண்டுவாரியாக)

2019 ஆம் ஆண்டு முதல், போக்சோ சட்ட வழக்குகளில் 6 வழக்குகள் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 220 வழக்குகள் 22 ஆண்டுகள் சிறை தண்டனை, 1 வழக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை, 159 வழக்குகள் வாழ்நாள் சிறை தண்டனை என்று முடிக்கப்பட்டுள்ளன.  64 வழக்குகள் இரட்டை வாழ்க்கை மற்றும் உயர் தண்டனையில் முடிக்கப்பட்டுள்ளன.

பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், தடுப்பு நடவடிக்கைகள், சட்ட விதிகள் மற்றும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com