சென்னை: தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 1500 மது பாட்டில்கள் பறிமுதல்!

தாம்பரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 1500 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்pt desk

செய்தியாளர்: சாந்தகுமார்

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் நேற்றிரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்தனர். சோதனை முடிவில் அந்த வாகனத்தில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தை சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Police station
Police stationpt desk

இதைத் தொடர்ந்து வாகன ஓட்டுனரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மது பாட்டில்களை அவர் பம்மலில் இருந்து கோவிலாஞ்சேரி பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்
அன்று மனைவியை சேர்த்து வைக்கக் கோரி டவரில் ஏறிய கணவன்; இன்று அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பியோட்டம்!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் அரசு மதுபானக் கடைகள் விடுமுறை என்பதால் கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டதா இவை, எந்த மதுபான கடைக்கு சொந்தமானது என்பது குறித்து போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com