\
விழுப்புரம்: பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் மரணம்

விழுப்புரம்: பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் மரணம்

விழுப்புரம்: பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் மரணம்
Published on

விழுப்புரம் அருகே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ (15). இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவரது வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் வீட்டின் உள்ளே இருந்து தீப்புகை வந்தது.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது உடலில் நெருப்புடன் ஜெயஸ்ரீ எரிந்து கொண்டிருந்தார். அவரை மீட்ட உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது, தன்னை கட்டிப்போட்டு அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன், கலியபெருமாள் ஆகிய இரண்டு பேரும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமாரிடம் ஜெயஸ்ரீ வாக்குமூலம் அளித்தார். அதன்பேரில் முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரையும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com