15 வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக மீட்பு

15 வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக மீட்பு

15 வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக மீட்பு
Published on

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வனப்பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 15-வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் சிவகுமார். சிறுவனின் தந்தை கேசவன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். நேற்று பிற்பகல் 2 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுவன் சிவகுமார் அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனைத்தொடர்ந்து சிறுவனின் தாய் மற்றும் உறவினர்கள், பல இடங்களில் சிவகுமாரை தேடியுள்ளனர்.

அப்போது, கோட்டை பகுதியில் உள்ள வனப்பகுதியில் இரண்டு பாறைகளுக்கு நடுவில் புதரில் சிவகுமார் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து எலவனாசூர்கோட்டை போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகுமாரின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்ன காரணத்திற்காக இந்தக் கொலை நடந்துள்ளது..? கொலை செய்தவர்கள் யார்..? என்ற கோணத்தில் போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com