ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டச் சென்றதாக 15 தமிழர்கள் கைது

ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டச் சென்றதாக 15 தமிழர்கள் கைது

ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டச் சென்றதாக 15 தமிழர்கள் கைது
Published on

ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டச் சென்றதாக, வேலூர் மாவட்டத்தில் 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஆந்திராவில் செம்மரம் வெட்டுவதற்கு, சிலர் செல்வதாக ஆம்பூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில், மாதனூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் மூவர் செம்மரம் வெட்டச் செல்லவிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர்களையும் குருராஜபாளையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 8 இரு‌சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவர்களுடன் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com