\
அயனாவரம் காவல் நிலையத்தில் 15 பேருக்கு கொரோனா !

அயனாவரம் காவல் நிலையத்தில் 15 பேருக்கு கொரோனா !

அயனாவரம் காவல் நிலையத்தில் 15 பேருக்கு கொரோனா !
Published on

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இதுவரை 15 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அயனாவரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஒருவர், 4 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட இதுவரை மொத்தமாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்குப் பிரிவு ஆய்வாளர் பாலமுரளி, கொரோனா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது கொரோனாவால் தமிழகத்தில் காவல்துறையில் நிகழ்ந்த முதல் உயிர்ப் பலியாகும்.

சென்னை காவல்துறையில் இதுவரை கொரோனாவால் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 300 பேர் பூரண குணமடைந்து பணிக்குத் திரும்பி உள்ளனர். இந்நிலையில் அயனாவரம் காவல் நிலையத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com